Egyptians pyramid?:
அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் எகிப்தியர்கள் எதற்க்காக பிரமிடு கட்டினார்கள்? எவ்வாறு கட்டினார்கள்? அதை காட்டியது மக்களா? அல்லது அடிமைகளா? கட்டியவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்று இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.
எகிப்தில் நூற்றுக்கணக்கான பிரமிடுகள் உள்ளன. அதில் Gizaவில் இருக்கின்ற The great pyramid தான் உலகத்தில் மிக உயரமான பிரமிட் என்று அழைக்கப்படுகிறது. 20 000 மக்கள் சேர்த்து இதை கட்டி முடித்து உள்ளார்கள். 20000 கட்டுமான தொழிலார்கள் சேர்ந்து இந்த கட்டுமானம் கட்டினார்கள் அல்லவா. இதற்க்கு மொத்தம் ஆகக்கூடிய Blocks அதாவது கற்களால் கட்டக்கூடிய Block அதாவது செங்கல்லை போன்றது ஆனால் செங்கல் இல்லை.
இந்த Great pyramidஐ 20லட்சம் கற்கள் கொண்டு கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு Blockஇன் எடையும் 2அரை டன் என்று கூறப்படுகிறது. ஒரு டன் என்றால் ஆயிரம் கிலோ. 2அரை டன் என்றால் கிட்டத்தட்ட 2500கிலோ. இதுதான் இந்த உலகத்தில் மிக உரமான கட்டிடம் என்று கூறப்படுகிறது. எவ்வளவு காலத்திற்கு என்றால் 4000 ஆண்டுகளாக கிட்டத்தட்ட அந்த பிரமிடு இந்த உலகத்தின் மிக பெரிய பிரமிடாக இருந்து வந்து உள்ளது.
இப்போது சமீபத்தில் 500 ஆண்டுகளுக்கு முன்னதாக தான் மிக பெரிய கட்டிடங்கள் எல்லாம் கட்ட ஆரம்பித்தோம். 4000 ஆண்டுகள் உலகத்தின் மிக பெரிய கட்டுமானம் என்று பெயர் பெற்ற ஒரே கட்டுமானம் என்றால் அது Gizaவில் உள்ள The great பிரமிடை கூறலாம். எகிப்தில் Gizaவில் உள்ள The great pyramid 7 உலக அத்தியங்களில் ஓன்று
Why did the Egyptians build the pyramid?
குறிப்பாக, இந்த பிரமிடுகள் எதற்கு காட்டப்படுகிறது என்றால், அரசர்கள் இறந்ததற்கு பிறகு அவர்களுக்கு மறுவாழ்வு என்று ஓன்று உண்டு. இறந்ததற்கு பிறகு வாழ்கை இருக்கிறது என்று சொல்லி, அவர்கள் பயன்படுத்திய தங்கங்கள், பொக்கிஷங்கள், ஆபரணங்கள் எல்லாம் அவருடன் சேர்த்து அந்த புதைக்கப்படுகிறது. இறந்தவர் Momyகளாக ஆகி, பதப்படுத்தி வைத்து, அதனுடன் பொக்கிஷங்களை வைத்த பின்னர் தான் அந்த பிரமிடு கட்டப்படுகிறது. இந்த பிரமிடுக்கு பிறகு அவர்கள் சொர்க்கம் போவார்கள் என்பது அவர்கள் நம்பிக்கை.
How did the Egyptians build the pyramid?
பிரமிடுகள் முழுக்க முழுக்க அடிமைகளை வைத்து கொடூரமாக கட்டப்பட்டது என்று சில பேச்சுக்கள் நிலவுகின்றது. ஆனால், அங்கு கிடைத்த குறிப்புகள் வைத்து பார்க்கின்ற போது அது தவறு ஒரு கூற்று என்று கூறப்படுகிறது. மக்களின் ஒரு பிரிவினர் இந்த பிரமிடு காட்டுவார்க்கு பயன்படுத்தபட்டனர். இந்த வேளையில் ஈடுப்பட பிறகு அவர்கள் பல உளைச்சல்களுக்கும் ஆளானார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
How they were treated?
அவர்கள் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்றால், அவர்களுக்கு நல்ல உடை கொடுக்கப்பட்டு உள்ளது. நல்ல உணவு கொடுக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு அடிபட்டால் அவர்களுக்கென மருத்துவ குறிப்புகள் கொடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. அவர்கள் வேலை முடிந்ததும் வீட்டிற்கு அனுப்பட்டனர் என்று குறிப்புகள் கூறப்படுகிறது.

0 Comments