How An Igloo Keeps You Warm? in Tamil:
அனைவருக்கும் வணக்கம்!!! நமது தமிழ்நாட்டில் அதாவது தென் இந்தியாவில் வசிப்பவர்களுக்கு 21degree Celsius கீழே வெப்பநிலை என்றாலே மிகவும் குளிராக இருக்கும். இன்னும் சில ஊரில் -40 degree Celsius வெப்பநிலை தான் இருந்தது அதாவது கடும் குளிர் இருந்தது என்றே கூறலாம். ஆனால் அங்கு வாழுக்கின்ற மக்கள் எப்படி அந்த குளிரில் எப்படி வீடு கட்டி வாழ்ந்தார்கள் என்றும், ஏன் இந்த Igloo சிறது வெப்பமாகவும் இருக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
Why did the Eskimos build the Igloo?
Eskimos, ஆர்ட்டிக் Region அதாவது பூமியின் வடக்கு பகுதியில் இருக்கின்ற Green land, Canada, America, and Russia இதுபோன்ற பகுதிகளில் வாழ்ந்தவர்கள் தான் Eskimos. ஆர்டிக் பகுதி என்பதால், அங்கு குளிர் மிக அதிகமாக இருக்கும். கிட்டத்தட்ட -45degrees Celsius இருக்கும். ஆனால், அவர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்றால், அவர்களுக்கென பிரத்தியேக வீடுக்கட்டி வாழ்ந்து வந்தார்கள். அந்த வீட்டின் பெயர்தான் Igloo.
Igloo - How its works?:
வெளியே -45degree வெப்பம் இருந்தாலும், அவர்கள் Iglooவை பிரத்தியேகமாக காட்டியதால், Igloo வீட்டிற்கு உள்ளோ -7degree முதல் -16degree வரை தான் வெப்பம் இருந்தது.அதனால், அவர்கள் கடும் குளிரில் இருந்து காப்பாற்றிக்கொள்ள முடிந்தது. கொஞ்சம் சிறிய Igloo வீடு, பெரிய Igloo வீடு என்று அவர்கள் வசதிக்கேற்ப கட்டிக்கொண்டனர். இந்த சின்ன Igloo வீடு ஒருநாள் அல்லது இரண்டு நாள் மட்டுமே தாங்க முடியும். பெரிய வகையான Igloo வீடுகளில் 5 room குறைந்தது இருக்கும். இந்த Igloo வீடுகள் பரவளையம் வடிவில் இருக்கும். ஒரு பந்தை பாதியாக வெட்டி வைத்தது போல இருக்கும்.
உள்ளே நுழையக்கூடிய பாதை மிகவும் சிறியதாக இருக்கும். ஏனென்றால் உள்ளே இருக்கும் வெப்பம் வெளியே வராமல் இருக்கவேண்டும். வெளியே இருக்கக்கூடிய குளிர் உள்ளே வரக்கூடாது என்பதற்க்காக அவ்வாறு கட்டமைக்கப்பட்டு உள்ளது. இந்த Igloo வீட்டுக்கு என்று கதவுக்கூட இருக்கும். இந்த கதவு அங்குள்ள விலங்குகளை வேட்டையாடி அதன் தோல்களை கொண்டு செய்யப்பட்டு உள்ளது. இதனால் உள்ளே இருக்கக்கூடிய வெப்பம் வெளியே போகாத வகையில் தாங்கிப்பிடிக்கும்.
Igloo வீடு உள்ளே நுழையும்போது மூன்று படிநிலைகளில் இருக்கும். உள்ளே நுழையும் பகுதி முதல் படிநிலை, அதற்கு நடுவில் விளக்கு வைப்பதற்கு சிறிய இடம், அதற்க்கு மேல் ஒரு சிறிய படி அமைத்து அதற்க்கு மேல் ஒரு சிறிய இடம் இருக்கிறது இதை நீங்கள் படத்தில் பார்க்கலாம். இந்த இடம் ஏன் மிகவும் உயரத்தில் வைத்து உள்ளார்கள் என்றால், அந்த அறைக்குள் இருக்கும் குளிர்ந்த கற்று எப்போதும் அடர்த்தி அதிகமாக இருக்கும். அதனால் அது எப்போதும் கீழே இருக்கும். நமது உடலில் இருக்கும் வெப்பம் வெளியே வரும்போது அது அறைக்குள் இருக்கும் குளிரை சூடாக்கி வெப்பக்காற்றாக்கி அந்த வெப்பக்காற்று எப்போதும் மேலே இருக்கும்.
அதனால் நாம் மேலே படுக்கும் போது அங்கு உள்ள குளிர் காற்று கீழே இருக்கும். நாம் மேலே படுத்து கொண்டு இருக்கும் இடம் சூடான காற்றினால் சூடாக இருக்கும். இந்த சூடான காற்று இருக்கும் பகுதி கிட்டத்தட்ட 16degree Celsius வரை இருக்கும்.
இங்கு மூன்று அறிவியல் விதிகள் செயல்படுகிறது. 1. Radiation, 2. Convection, 3. Conduction. Radition மூலமாக மனிதனுடைய வெப்பம் அதாவது நாம் உட்கார்ந்துக்கொண்டு இருக்கிறோம் என்றால் நமது உடலில் இருந்து சிறிது சிறிதாக வெப்பம் வெளியேறும் அதாவது சூரியன் இடம் இருந்து வெளியே வரும் வெப்பம் ஒரு விதமான Radition. அடுத்து Convection அதாவது அந்த வெப்பமான காற்று மேல்நோக்கி செல்வது. அடுத்து Conduction அதாவது வெப்பம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பரவுவது. இந்த Igloo வீட்டில் சுவர்தான் Conduction ஆக செயல்படுகிறது. அந்த சுவர் வழியாக ஒவ்வொரு இடத்திற்கும் வெப்பம் Conduct ஆகி அந்த சுவர் முழுவதும் பரவ வைக்கிறது.
இவ்வாறு தான் இந்த Igloo வீடு செயல்படுகிறது.
0 Comments