TNPSC:
TNPSC என அழைக்கப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது மாநில அளவிலான சூழ்நிலைப்பணிகளுக்காக பல்வேறு பதவிகளுக்கு நியமனம் செய்யும் பொருட்டு போட்டித் தேர்வுகள் நடத்த இந்திய அரசு அமைப்பின் பிரிவு 315இன் படி நிறுவப்பட்ட ஓர் அமைப்பு ஆகும்,
இதன் மூலம் வெவ்வேறு ப நியமனங்களுக்காக அத்தேர்வுகளை எழுவதற்கான தகுதிகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன,
TNPSC GROUP 1 SERVICE:
பதிவுகள்:
1. டெபுடி கலெக்டர்
2. கமர்ஷியல் டாக்ஸ் ஆபிசர் .
3. டிவிஷனல் டெவலப்மெண்ட் ஆபிசர்
4. மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி'
5. டெபுடி சூப்ரிண்டென்ட் ஆப் போலீஸ் - வேரு 1
6. டெபுடி ரிஜிஸ்ட்ரார் ஆஃப் கோ-ஆப்பரேடிவ் சொசைட்டீஸ்
7. மாவட்ட ரெஜிஸ்ட்ரார்
8. டிவிஷனல் ஃபயர் ஆபீசர் ஆகிய பணிகளுக்கு GROUP 1 தேர்வு நடத்தப்படுகிறது,
கல்வித்தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து' ஏதாவது ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்,
வயது:
வயது 24 வயது முதல் 30 வயது வரை. பிற்படுத்தப்பட்ட இனத்தவருக்கு 33 வயது வரையிலும் SC/ST பிரிவுகளுக்கு 35 வயது வரையிலும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படுகிறது.
GROUP I-A SERVICES:
பதவி :
- தமிழ்நாடு வனத்துறையில் அசிஸ்டெண்ட் கர்சர்வேப்பர்.
கல்வித்தகுதி :
ஏதேனும் ஒரு அறிவியல் 'பட்டம் பெற்றிருக்க வேண்டும். அறிவியல் அல்லாத பட்டம் பெற்று இருந்தால் +2/PUC இல் அறிவியல் பாடத்தை பின்பற்றி இருக்க வேண்டும்.
வயது :
வயது 24 வயது முதல் 30 வயது வரை. பிற்படுத்தப்பட்ட இனத்தவருக்கு 33 வயது வரையிலும் SC/ST பிரிவுகளுக்கு 35 வயது வரையிலும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படுகிறது,
GROUP 1-B SERVICE
பதவி :
தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையில் ASSISTANT COMMISSINOR
கல்வித்தகுதி:
கலை, அறிவியல், வணிகவியல் அல்லது ஏதாவது பல்கலைக்கழகத்திலிருந்து சட்டத்தில் பட்டம்.
வயது:
வயது 24 வயது முதல் 30 வயது வரை. பிற்படுத்தப்பட்ட இனத்தவருக்கு 33 வயது வரையிலும் SC/ST பிரிவுகளுக்கு 35 வயது வரையிலும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படுகிறது. பெண்களுக்கு 35% வயது வரை வயது வரம்பில் சலுகை உண்டு.
GROUP 4 SERVICES
பதவிகள்:
டைப்பிஸ்ட், ஜூனியர் அஸிஸ்டெண்ட், ஸ்டெனோ டைப்பிஸ்ட்.
கல்வித்தகுதிகள்:
S.S.L.C தேர்ச்சி. மேலும் டைப்பிஸ்டுக்கும் தமிழ், ஆங்கில தட்டச்சு ஸ்டெனோ டைப்பிஸ்டுக்க Sharthand
வயது:
21 to 30 (BC/ST,SC பிரிவினருக்கு வயதுவரம்பிக்கு சலுகை உண்டு.)
GROUP 5-A SERVICES:
பதவிகள்:
செக்ரெட்டேரியேட் பிரிவுகளில் அசிஸ்டெண்.
கல்வித்தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம்.
வயது:
21 To 30 (BC/ST,SC பிரிவினருக்கு வயதுவரம்பிக்கு சலுகை உண்டு.)
GROUP 6 SERVICES:
பதவிகள்:
தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை எக்ஸிகியூட்டிவ் ஆபிசர், கிரேடு ஐ மற்றும் ஐஐ
கல்வித்தகுதி :
ஏதேனும் ஒரு கலை/அறிவியல்/வணிகவியல் பட்டம்.
வயது:
25 டு to 35 வரை.
GROUP 7 SERVICES:
பதவிகள்:
தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை எக்ஸிகியூட்டிவ் ஆபிசர், கிரேடு 4
கல்வித்தகுதி :
SSLC Pass
வயது:
25 டு to 35 வரை.
அவ்வப்போது அரசுப்பணி காலியிடங்டங்கள் TNPSCயில் நடத்தப்படுகின்றன. தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் செய்தித்தாள்களில் வெளியிடப்படுகின்றன. அறிவிக்கப்படும் தேர்வுக்கள் குறித்த முழுவிபரங்களை https://tnpsc.org என்ற இணையதள முகவரியில் பெறலாம்.
அலுவலக முகவரி:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம், ஓமந்தூர் அரசினர் தோட்டம். அண்ணா சாலை. சென்னை-600 002
0 Comments