The secret of temples in Tamil Nadu | தமிழக கோவில்களின் ரகசியங்கள்:

                நம்முடைய உலகம் ஏதேனும் ஒரு புள்ளியை அடிப்படையாக வைத்து நகர்ந்து கொண்டு இருக்கிறது. உலகத்தில் எத்தனையே மக்கள் இருந்தலும் பேய்க்கும் கடவுளுக்கும் அஞ்சாதவர்கள் மிக குறைவுதான். உங்களுக்கு பேய் மீதும் சாமி மீதும் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் சில சமயங்களில் ஏதேனும் ஒரு சக்தி நம்மையும் மீறி சில செயல்களை செய்ய தூண்டுவது உண்மைதான். சற்றே கடவுள் என்ற நம்ம என்ன பெயர் வைத்தாலும் ஆராய்ச்சியாளர்களே மிரண்டு கண்டுபிக்கடிக்காத மர்மங்கள் தமிழகத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படிப்பட்ட மர்மக்களையும் ரகசிங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

1. தஞ்சை பெரியக்கோவிலின் ரகசியம்:

Thanjai periyakkovil
                    தஞ்சை பெரியக்கோவில் வெளிநாட்டு மன்னரின் சிலை. உலகின் சிறந்த கட்டிட கலையாக சிறப்பிக்கப்பட்ட ஒன்றுதான் இந்த தஞ்சை பெரியக்கோவில் சோழர்களால் கட்டப்பட்ட இந்த கோவில் கட்டிட கலையை மட்டும் அல்லாமல் சிலவேறு விஷயங்களையும் குறிக்கிறது. ஐரோப்பிய முகம் தொடரத்தொடு இருக்குகின்ற ஒருவருடைய சிலை தஞ்சாவூர் கோபுரத்தில் செதுக்கப்பட்ட சிலைகளில் பல்வேறு கலைகள் பறைசாற்றும் உருவங்கள் உள்ளன. நன்றாக உற்று பார்த்தால் அதில் ஐரோப்பிய முகத்துடன் இருக்கும் ஒருவருடைய சிலை வைக்கப்பட்டு உள்ளது. கி.மு. 1010 ஆண்டுகளில் கட்டப்பட்ட  இந்த கோவில் ஐரோப்பிய சிலை இருப்பதில் என்ன ஆச்சிரியம் என்று கேக்கலாம். அதுமட்டும் இல்லாமல் சீன பயணி ஒருவருடைய சிலையும் அங்கு செதுக்கப்பட்டு இருக்கிறது. சீன சிலை யாரு என்று கணிக்க முடியாத போதிலும், ஐரோப்பிய சிலை யாரு கணித்து இருக்கிறார்கள் ஆய்வாளர்கள். அவர் பிரான்ஸ் மன்னர் இரண்டாம் இராபர்ட். அவருடைய காலமும் கி.மு. 10 நூற்றாண்டு என்றுதான் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதில் என்ன ஆச்சிரியம் என்றால் 1500 ஆண்டுகளில் தான் வாஸ்கோடா காமா என்பவர் உலகம் முழுவதும் சுற்றி வந்து உள்ளார். அதைத்தான் உலகை ஒன்றிணைக்க முயன்ற முதல் முயற்சி என்று குறிக்கின்றனர். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் தமிழன் எத்தனையே ஆண்டுகளுக்கு முன்பு உலகத்தோடு வணிகம் செய்து கொண்டு வருகிறது என்பது தெரிந்து வருகிறது. அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகதான் அவர்கள் சிலையை கோவில்களில் செதுக்கப்பட்டு உள்ளார்கள் சோழ மன்னர்கள்.

2. கிருஷ்ணர் வெண்ணெய் பந்து:


                பிடியில்லாம் நிற்கக்கூடிய பறை கிருஷ்ணர் வெண்ணெய் பந்து பறை. உலகத்தோட பல்வேறு ஆய்வாளர்கள் வந்தும் விடை கண்டுப்பிடிக்க முடியாத நிகழ்வு இது. மகாபலிபுரத்தில் அமைந்திருக்கும் இந்த பந்து போன்ற பாறை ரொம்பவே அசாதாரண நிலையில் மலைக்கு மேலே இருக்கிறது. இந்த பறை 1200 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கபட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றன. ஆனால் யார் உருவாக்கினார்கள் அல்லது இயற்கையாகவே உருவாகியாத என்பது மர்மாக உள்ளது. இதனுடைய எடையை ஒப்பிடும்போது அது மலையில் இருந்து கீழே விழ வேண்டும் ஆனால் ஒரு தகுந்த பிடிப்பு இல்லாமல் தகுந்த இடத்தில் இருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பு மெட்ராஸ் கவுன்சலர் இதை அகற்ற முயற்சி செய்து உள்ளார். இதனால் அங்கு வாழும் மக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று 13 யானைகளை கொண்டு அகற்ற முயற்சி செய்து உள்ளார். ஆனால் துளி அளவும் நகரவில்லை. ஆனால் இது இன்று வரை மர்மாகவே இருக்கிறது ஆனால் இது சுற்றளவுக்கு சாதகமா  இருக்கிறது. 

3. கோபத்தில் வியர்க்கும் சிலை:

Kopathil viyarkkum Silai
           நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலில் முருக பெருமான் சிங்கார வேலால் ஆக கட்சி அளிக்கிறார். இந்த கோவிலில் அக்டோம்பர் மாதத்தில் மொத்தம் 6 மாதங்கள் பண்டிகை நடத்துவது வழக்கம். இதில் 5வது நாள் அசுரனை அழிக்கும் நிகழ்வு நடக்கும். இந்த நிகழ்வின் பொது சிங்கார வேலன் தன்னுடைய தாயிடம் தன்னுடைய வேலை கொடுப்பதாக நம்பிக்கை இருக்கு. இதில் என்ன ஆச்சிரியம் வழக்கமான நிகழ்வுதானே என்று சொல்ல தோனும்.சுர பத்மனை அழிக்கும்போது தன்னுடைய ஆயுதத்தை தான் தாயிடம் அளிக்கும்போது முருகனுடைய சிலை அசரணமாக காணப்படுத்தாகவும் முகத்தில் சில மாற்றங்களும் தென்படுமாம். அதில் இருந்து வரும் வியர்வை துளிகள் உடல் வழியாக வந்து அபிஷேகம் தருவது போல காட்சி அளிக்குமாம் பக்தர்கள். இந்த வியர்வை துளிகள் தான் பக்கதர்களுக்கு அபிஷேகமாக அளிக்கப்படுகிறது இது நோய் நொடிகளை போக்குவதாகவும் நம்பப்படுகிறது. 

4. கும்பகோணம் நாச்சியார் கோவில்:        

kumbakonam natchiyar kovil

                கும்பகோண பக்கத்தில் நாச்சியார் கோவிலில் ஒரு அதிசியம் நடந்தாக  நம்பப்படுகிறது. அதாவது கருடன் சாமியின் எடை அதிகரித்து குறைவதாக நம்பப்படுகிறது. நாச்சியார் கோவிலில் ஒவ்வொரு மதமும் மார்கழி பங்குனி மாதங்களில் திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவின் போது கருடன் சிலைகள் கோவிலை சுற்றி ஊர்வுல்லமாக எடுத்து செல்லப்படும். கருவறையில் இருந்து சிலையை வெளியே எடுத்து செல்ல சிலையின் எடை அதிகரிக்குமாம்.மேலும் உள்ளே கொண்டு வரும்பொது எடை குறையுமாம். 

5. மிதக்கும் பாறைகள் | ராமர் பாலம்: 

Ramar palam
            இராமயண கதைப்படி இராமர் இந்தியாவில் இருந்து இலங்கை செல்ல கடல் வழியே மிதக்கும் பாதை உருவாக்கினார் என்பது ஒரு நம்பிக்கை. இந்த மிதக்கும் பறை என்பது உண்மையா என்ற கருத்து உண்டு. இராமேஸ்வரத்தில் கண்டறியப்பட்ட பாறைகள் மிதக்கத்தான் செய்கிறது. நீரில் மிதக்கக்கூடிய இந்த பாறைகள் சுற்றலா பயணிகள் அதிசியந்து தான் பார்க்கிறார்கள். இதை சில ஆய்வாளர்கள் சுண்ணாம்பு பாறை பவள பாறை என்று தான் கூறுகிறார்கள். இருந்தாலும் இந்த பாறையோட மிதக்கும் தன்மை மர்மாக தான் இருக்கிறது.