கப்பற்படை (Navy Services):
"முப்படைகளின் ஒன்றான கப்பற்படைகளில் 10, +2 படித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கும், டிப்ளமோ படித்தவர்களுக்கும் பல்வேறு துறைகளில் பட்டப்படிப்பு பெற்றவர்களுக்கும் ஏராளமான வேலை அவைகளுக்கான வயது வரம்பு, கல்வி தகுதிகள், அணுக வேண்டிய முறைகள் மற்றும் பிற விவரங்கள் பற்றிய சிறு வழிகாட்டி இது.."
குறுகிய காலச்சேவைப் பிரிவு : (Short service commission):
ஒரு குறப்பிட்ட காலம் இந்திய கப்பற்படையில் பணியாற்றிய பிறகு, விரும்பினால் பணியிலிருந்து விலகி விடலாம். முன்னாள் கப்பற்படையினர் என்ற அடிபடையில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை பெறலாம். இந்த பிரிவில் உள்ள வேலை வாய்ப்புகளும், அவைகளில் சேர்வதற்கான தகுதிகளும் வருமாறு
நேரடியாகச் சேர்தல்:
1. மின் பிரிவு:
வயது வரம்பு: 19லிருந்து 25 வரை
கல்வித்தகுதிகள்: பொறியலில் பட்டப்படிப்பு, எலக்ட்ரிகல் எலெக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன் பாடங்களில் பட்டம், இன்ஸ்ட்யூஷன் ஆப் இஞ்சினியரிஸ் (இந்திய) அல்லது இன்ஸ்ட்யூஷன் ஆப் டெலி கம்யூனிகேஷன் (இந்தியா) அங்கீகாரம் பெற்ற தகுதிகள் கொண்டவர்.
2. மரைன் இன்ஜினியரிங் பிரிவு:
வயது வரம்பு: 19லிருந்து 25 வரை.
கல்வித்தகுதிகள்: மரைன், மெக்கானிக்கல், ஏரோ நாட்டிக்கல் கன்ட்ரோல், மெட்டலாஜிக்கல், புரொடக்ஷன் டெலிகாம், எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிகல், ஏவியானிக்ஸ், கம்ப்யூட்டர் சாப்ட்வேர் அல்லது இவைகளுக்கு. இணையான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருத்தல்,
குறிப்பு :
விண்ணப்பதார் ஆணோ, பெண்ணோ, திருமணம் ஆகாதவராக இருக்க வேண்டும்.
3. கல்விப் பிரிவு :
ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 21லிருந்து 25வரை.
கல்வித் தகுதிகள்: குறைந்தபட்சம் மேற்பட்டப்படிப்பில் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி, இயற்பியல் பட்டப்படிப்பில் கணிதம் கட்டாயம். கணிதம் பட்டப்படிப்பில் இயற்பியல் கட்டாயம். வேதியியல். பட்டப்படிப்பில் இயற்பியல் மற்றும் கணிதம் கட்டாயம். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ். பட்டப்படிப்பில் இயற்பியல் அல்லது கணிதம் கட்டாயம். கலை பாடங்கள் (ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு, அரசியல், அறிவியல்), பொறியியல் பின்வரும் பாடங்களில் பட்டம் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், டெக்னாலஜி.
4. ஏடிசி (ஏர் டிராபிக் கன்ட்ரோல்) பிரிவு:
ஆண், பெண் இருபாலரும் சேரலாம்.
வயது வரம்பு: 19லிருந்து 25 வரை.
கல்வி தகுதிகள்: குறைந்தபட்சம்: B.sc பட்டப்படிப்பில் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி. இயற்பியல் மற்றும் கணிதத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள்.
5. லாஜிஸ்டிக்கல் பிரிவு:
ஆண், பெண் இருபாலரும் சேரலாம்.
வயது வரம்பு: 19லிருந்து 25வரை.
கல்வித் தகுதிகள்: பி.ஏ., பொருளாதாரம் பட்டப்படிப்பில் இரண்டாம் வகுப்பு தேர்ச்சி, பி.காம்., பட்டப்படிப்பில் இரண்டாம் வகுப்பு தேர்ச்சி. எந்தப் பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்களும் பின்வரும் பட்டப்படிப்பு படித்திருந்தால் தகுதி உடையவர்களாகவர். மெட்டீரியல் மேனேஜ்மெண்ட் அல்லது பைனான்சியல் மேனேஜ்மெண்டில் பட்டம் அல்லது பட்டயம் பெற்றிருக்க வேண்டும்.
6. சட்டப்பிரிவு :
இதுவும் ஆண்-பெண் இரு பாலாருக்கும் பொது.
வயது வரம்பு: 22லிருந்து 27 வரை.
கல்வித் தகுதிகள்: சட்டப்படிப்பில் தேர்ச்சி அவசியம். 55 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1961- ஆம் ஆண்டு சட்டப்படி வழக்கறிஞராகப் பதிவு செய்வதற்கான தகுதி.
மேற்படி பிரிவுகளில் வரும் வேலை வாய்ப்புகளைப் பற்றிய தகவல்களை வேலைவாய்ப்பு செய்திகள் இடம் பெறும் செய்தித்தாள்கள் (எம்ப்ளாய்மென்ட் நியூஸ் மற்றும் வட்டார செய்தித்தாள்களில் அந்தந்த மொழிகளில் வரும் விளம்பரங்கள் மூலம் அறியலாம். பணியிடங்களின் எண்ணிக்கை, சம்பளம் போன்ற விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
II. நிரந்தர சேவைப் பிரிவு : (Permanent Commission)
1. நிர்வாகப் பிரிவு (Executive Branch) :
கேடெட் என்ட்ரி (நேஷனல் டிபென்ஸ் அகடெமி)
வயது வரம்பு: 16.5-லிருந்து 19 வரை.
கல்வித் தகுதி: 10, +2 அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி. இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை படித்திருப்பது அவசியம்.
2. பொறியியல் பிரிவு :
கேடெட் என்ட்ரி (என்டிஏ)
வயது வரம்பு: 16.5 லிருந்து 19 வரை.
கல்வித் தகுதி : 10, +2 அல்லது அதற்கு சமமான தேர்ச்சி. இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களை படித்திருத்தல் அவசியம். இப்பாடங்களில் ஒட்டு மொத்தமாக 70 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில . பாடத்தில் 10 அல்லது 42 வகுப்பில் குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
3. பொறியியல் (நேவல் ஆர்க்கிடெக்ட்ஸ்) :
வயது வரம்பு : 16.5 லிருந்து 19 வரை.
கல்வித் தகுதிகள்: 10, 22. அல்லது அதற்கு சமமான தேர்ச்சி. இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களை படித்திருக்க வேண்டும். இப்பாடங்களில் ஒட்டு மொத்தமாக 70 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில பாடத்தில் 10 அல்லது +2 வகுப்பில் குறைந்த பட்சம் 50
சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
4. எலெக்ட்ரிக்கல் பிரிவு - கேடெட் (என்டிஏ) :
வயது வரம்பு: 16.5 லிருந்து 19 வரை.
கல்வித் தகுதிகள்: 10, +2. அல்லது அதற்கு சமமான தேர்ச்சி. இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களை படித்திருக்க வேண்டும்.
5. 10, +2 (தொழில் நுட்பப் பிரிவு) கேடெட்:
வயது வரம்பு: 16.5 லிருந்து 19 வரை.
கல்வித் தகுதிகள்: 10, +2. அல்லது அதற்கு சமமான தேர்ச்சி. இயற்பியல், , வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களை படித்திருக்க வேண்டும். இப்பாடங்களில் ஒட்டு மொத்தமாக 70 சதவீத மதிப்பெண். ஆங்கில பாடத்தில் 10 அல்லது +2 வகுப்பில் குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
நேரடி நுழைவு (கப்பற்படை ஆயுத மேற்பார்வைப் பிரிவு)
(Direct Entry Naval Ormanant Inspection Cadre)
வயது வரம்பு : 19.5 லிருந்து 25 வரை;
கல்வித் தகுதிகள்: மின்னணுவியல், மின்னியல், இயந்திரவியல் போன்ற பொறியியல் துறைகளில் பட்டம் பெற்றவர்களும், மின்னணுவியல், இயற்பியல்
போன்றவற்றில் பட்ட மேற்படிப்புப் படித்தவர்களும் சேரலாம்.
நேரடி நுழைவு (சட்டப்பிரிவு) :
வயது வரம்பு : 22லிருந்து 27 வரை. கல்வி மற்றும் பிற
தகுதிகள் : சட்டத்துறையில் பட்டப்படிப்பு. வழக்கறிஞர் சட்டம்
1961-இன்படி வழக்கறிஞராகப் பதிவு செய்து கொள்வதற்கான தகுதி.
சட்டப்படிப்பு தேர்வில் குறைந்த பட்சம் 55 சதவீத மதிப்பெண்.
நேரடி நுழைவு (கல்விப்' பிரிவு) :
வயது வரம்பு: 21லிருந்து 25வரை.
கல்வித் தகுதிகள்: குறைந்தபட்சம் மேற்பட்டப்படிப்பில் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி, இயற்பியல் பட்டப்படிப்பில் கணிதம், கணிதம் பட்டப் படிப்பில் இயற்பியல், வேதியியல் பட்டப்படிப்பில் இயற்பியல் மற்றும் கணிதம், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் இயற்பியல் அல்லது கணிதம் இருந்திருக்க வேண்டும். கலைப் பாடங்கள் (ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு, அரசியல், அறிவியல்). பொறியியலில் பின்வரும் பாடங்களில் பட்டம் மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், டெக்னாலஜி.
பொறியியல் பிரிவு (மரைன் இஞ்சினியர்ஸ்) :
குறுகிய கால சேவைக்கான அதே தகுதிகள் தான் நிரந்தர சேவைக்கும் விதிக்கப்பட்டுள்ளன.
வயது வரம்பு: 19.5%லிருந்து 25 வரைதான்.
கல்வித்தகுதிகள்: மரைன், மெக்கானிக்கல், ஏரோநாட்டிக்கல் கன்ட்ரோல், மெட்டலாஜிக்கல், புரொடக்க்ஷன் டெலிகாம், எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிகல், ஏவியானிக்ஸ், கம்ப்யூட்டர் சாப்ட்வேர் அல்லது இவைகளுக்கு சமமான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருத்தல்.
பொறியியல் பிரிவு (நேவல் ஆர்க்கிடெச்சர்) :
வயது வரம்பு : 21லிருந்து 25 வரை.
கல்வித்தகுதி : நேவல் ஆர்க்கி டெச்சர், மெக்கானிக்கல், எரோநாட்டிக்கல் சிவில், மெட்டலாஜிக்கல் போன்ற துறைகளில் பட்டம், குறைந்தபட்சம் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி நிலை.
மின் பிரிவு :
வயது வரம்பு : 19.5லிருந்து 25 வரை.
கல்வித் தகுதிகள்: பொறியியல் பட்டப்படிப்பு, எலக்ட்ரிகல் எலெக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன் போன்ற பாடங்களில் பட்டம் அல்லது இவைகளுக்கு சமமான தேர்வுகளில் தேர்ச்சி. இன்ஸ்ட்யூஷன் ஆப் இஞ்சினியரிங் (இந்தியா) அல்லது இன்ஸ்ட்யூஷன் ஆப் டெலி கம்யூனிகேஷன் இஞ்சினியரிங் (இந்தியா அங்கீகாரம் பெற்ற தகுதிகள்.
ஆர்ட்டிபிஸர் அப்ரென்டிஸ் :
வயது வரம்பு: 15லிருந்து 18வரை. இந்தியர்களும் நேபாள நாட்டை சேர்ந்தவர்களும் தேர்ச்சி பெற தகுதி உடையவர்கள், திருமணம் ஆகாத ஆண்கள் மட்டுமே தகுதி உடையவர்கள்.
கல்வித் தகுதிகள்: கல்வித் தகுதி மெட்ரிக் அல்லது அதற்கு சமமானது; அறிவியல் மற்றும் கணிதம் படித்திருக்க வேண்டும். மதிப்பெண் 60 சதவீதத்திற்கும் மேல் பெற்றிருக்க வேண்டும். இதற்கு மேற்பட்ட எந்தவொரு கல்விக் கழகத் தேர்விலும் அறிவியல் மற்றும் கணிதத்துடன் 55 சதவீதம் பெற்று தேர்ச்சி.
நேரடித் தேர்ச்சி-பட்டயதாரர்கள், பட்டயம் பெற்றிருப்பவர்கள் நேரடியாகக் கப்பற்படையில் சேரலாம். வயது வரம்பு 18லிருந்து 22 வரை. இந்தியர்கள் மற்றும் நேபாள நாட்டைச் சேர்ந்த கூர்க்கா இனத்தவர். திருமணம் ஆகாத ஆண்கள் மட்டும். கல்வித் தகுதிகள் பட்டயப் படிப்பிற்கான காலம் மூன்று ஆண்டுகள் கொண்டதாக இருக்க வேண்டும். இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்தொழில் பயிலகத்தில் (பாலிடெக்னிக்)
பயின்று இருக்க வேண்டும். தேர்வுகளில் 50 சதவீதத்திற்கு
குறையாத மதிப்பெண் பெற்று தேறி இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
கப்பற்படையைப் பொருத்தவரை ஒருவருக்குப் பல தகுதிகள் இருக்கலாம். எல்லாவற்றிற்கும் ஒரே படிவம், ஒரே விண்ணப்பம் என்று அனுப்பக் கூடாது. அந்தந்தப் பிரிவுக்கு தனித் தனி விண்ணப்பம் அனுப்ப வேண்டும். .
ஒரு பிரிவுக்கு ஒரு விண்ணப்பம் மட்டும்தான் அனுப்பவேண்டும். அதில் விருப்ப வரிசையைத் தெளிவாகக் குறிப்பிடவும்.
விண்ணப்பத்துடன் சான்றிதழ்கள்/நகல்கள் இணைத்து அனுப்பவேண்டும். அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு கொண்ட இரண்டு புகைப்படங்களை (பின்புறத்தில் பெயர் எழுத வேண்டும்) இணைக்க வேண்டும்.
தேர்வு மையங்கள் அமைக்கப்படும் இடங்கள் :
அய்ஜால், அம்பாலா, பெங்களூரு, கொல்கத்தா, சென்னை, சில்கா, கோவை, புதுடெல்லி, டேராடூன், கவுகாத்தி, ஜாம்நகர்,ஜபல்பூர், ஜலந்தர், ஜம்மு, ஜோத்பூர், கொச்சி, லோனாவாலா, லாக்னோ, திம்லா, ஸ்ரீநகர், மும்பை, நாக்பூர், பாட்னா, செகந்திராபாத், ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர், போர்ட் பிளேர், வாஸ்கோடகாமா, விசாகப்பட்டினம்.
0 Comments