ராணுவம் (Army Service):
இந்திய இராணுவத்தில் தரைப்படையில் , சாதாரண ஜவான் (படைவீரர்) பதவியிலிருந்து மிக மிக உயர்ந்த பீல்ட் மார்ஷல் வரை பல பதவிகள் உள்ளன. பள்ளிப் படிப்பு, பட்டப்படிப்பு, சட்டப்படிப்பு, பொறியியல் படிப்பு மருத்துவப் படிப்பு படித்தவர்கள் மட்டுமல்லாது வேறு துறைகளில் படித்தவர்களும் பணியில் சேர வாய்ப்புகள் குவிந்துள்ளன.
குறைந்த படிப்பு படித்தவர்களுக்கும், பெண்களுக்கும் கூட இராணுவத்தில் இடம் உண்டு. இந்திய இராணுவத்தில் சேர்ந்து வேலை வாய்ப்புக்களை பெற விரும்புகிறவர்களுக்கும், ஆர்வமுள்ளவர்களுக்கும் பயன்தரக் கூடிய பல தகவல்களின் சிறிய தொகுப்பு இது.
1. படைவீரர் (Soldier) :
SSLC, Matric அல்லது 10-ஆம் வகுப்பு தேறியிருந்தால் Soldier general duty என்ற பணியிலும், இவற்றில் ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களுடன் படித்திருந்தால் Soldier Technical என்ற பணியிலும், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுடன் படித்திருந்தால் Soldier Clerk (குமாஸ்தா) அல்லது Store keeper technical பணியில் ஆங்கிலம், கணிதம் மற்றும் உயிரியல் பாடங்களைப் படித்திருந்தால் Nursing agency பணியிலும் சேரலாம்.
பத்தாம் வகுப்பு முடிக்கவிட்டால் Soldier Dressman general duties அல்லது Soldier dressman Spypet duties பணியிலும் சேரலாம்.
ஜூனியர் கமிஷன்ட் ஆபீசர்(Catterick):
ஜூனியர் கமிஷன்ட் ஆபிசர் (மத போதனை):
சர்வேயர் ஆட்டோ கார்ட்டோகிராபர்:
ஹவில்தார் (கல்வி)
படைப்பிரிவில் அதிகாரியாகச் சேர்வதற்கான கல்வித் தகுதிகள் வருமாறு:
இந்திய இராணுவ அகாடெமி - நேரடி அனுமதி :
1. பொறியியல் - பிரிவு:
அதிகாரிகள் பயிற்சி அகாடெமி :
ஷார்ட் சர்வீஸ் கமிஷன் (டெக்னிக்கல்) :
ஷார்ட் சர்வீஸ் கமிஷன் : (என்.சி.சி - விசேஷ நுழைவு திட்டம்)
வயது வரம்பு :
பதினாறு வயதில் சேருவதற்கான படைவீரர் பணிகள் :
- சோல்ஜர் - ஜெனரல் ட்யூட்டி
- சோல்ஜர் - டெக்னிக்கல்
- சோல்ஜர் கிளர்க் - ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல்
- சோல்ஜர் நர்ஸிங் அசிஸ்டென்ட் டர்
- சோல்ஜர் ட்ரேட்ஸ்மென் - ஜெனரல். ட்யூட்டீஸ்
- சோல்ஜர் ட்ரேட்ஸ்மென் - ஸ்பெசிபைட் ட்யூட்டீஸ்
இருபது வயதில் சேருவதற்கான பணிகள் :
இருபத்தேழு வயதில் சேருவதற்கான பணி :
- மதக்கல்வி கற்பிக்கும் ஜூனியர் கமிஷன்ட் ஆபிசர் பணியில் சேர 27-வயதில் விண்ணப்பிக்கலாம்
- சோல்ஜர் ட்ரேட்ஸ்மென் - ஜெனரல் ட்யூட்டீஸ் பணியில் இருபது வயதிற்குள் சேர்ந்து விட வேண்டும்.
- சோல்ஜர் - ஜெனெரல் சோல்ஜர் - டெக்னிக்கல் ட்யூட்டி பணியில் சேர அதிகபட்ச வயது வரம்பு - 21 அதற்கு மேல் போகக்கூடாது.
- சோல்ஜர் கிளர்க் - ஸ்டோர் கீப்பர், டெக்னிக்கல், சோல்ஜர், நர்ஸிங் அசிஸ்டென்ட் ஆகிய பணிகளில் சேர அதிக பட்ச வயது வரம்பு - 23.
- சர்வேயர் ஆட்டோ கார்ட்டோ கிராபர் மற்றும் ஹவில்தார் (கல்வி) குரூப் 'ஏ' மற்றும் 'பி' பணிகளில் சேர அதிகபட்ச வயது வரம்பு - 25.
- ஜூனியர் கமிஷன்ட் ஆபிசர் (கேட்டரிங்) பணியில் சேர அதிகபட்ச வயது வரம்பு - 27.
- மதக்கல்வி கற்றுக் கொடுக்கும் ஜூனியர் கமிஷன்ட் ஆபிசர் பணியில் சேர அதிகபட்ச வயது வரம்பு - 34
குறைந்த படிப்பு படித்தவர்களுக்கு :
- சமையல்காரர்கள்
- சலவைத் தொழிலாளர்கள்
- நாவிதர்கள்
- வீட்டு வேலைக்காரர்கள்
- தையல்காரர்கள்
- பண்ணை வேலை செய்வோர்
- எடுபிடி வேலைகளுக்கு உதவுகின்றவர்கள்
- சுமை தூக்குபவர்கள்
0 Comments