விமானப்‌படை (Air Force):

Air force in Tamil

        “இந்திய விமானப்‌ படையில்‌ விமானம்‌ ஓட்டுவதிலிருந்து (பைலட்) கணக்கு வழக்கு பார்ப்பது வரை பல வேலை வாய்ப்புகளும், அவைகளுக்கான பயிற்சிகளும்‌ "அளிக்கப்பட்டு வருகின்றன. பட்டதாரிகள்‌ மட்டுமல்ல, வெறும்‌ பத்தாம்‌ வகுப்பு வரை படித்தவர்களுக்கும்‌ விமானப்‌ படையில்‌ கதவுகள்‌ திறந்தே உள்ளன.

        தரைப்படை (இராணுவம்‌, கப்பற்படையைப்‌ போலவே விமானப்‌ படையிலும்‌ (Air force) பல பிரிவுகள்‌ உள்ளன.


பறக்கும்‌ பிரிவு (Flying Branch) :

         இது விமானப்படையில்‌ மிக முக்கியமான பிரிவு ஆகும்‌.

        இந்தப்‌ பிரிவில்‌ சேர்ந்தால்‌ போர்‌ விமானங்களை ஓட்டிச்‌செல்லும்‌ விமானி (பைலட்‌) ஆகலாம்‌. பொருட்களையும்‌, வீரர்களையும்‌ ஏற்றிக்‌ கொண்டு போய்‌ இறக்கும்‌ போக்குவரத்து விமானங்களை ஓட்டும்‌ விமானியாகப்‌ பணியாற்றலாம்‌ அல்லது ஹெலிகாப்டரை ஒட்டும்‌ விமானியாகலாம்‌. இவற்றில்‌ பிடித்ததைத்‌ தேர்ந்தெடுக்கலாம்‌.


விமானி (பைலட்‌) ஆக செய்ய வேண்டியது :

            இந்திய விமானப்படையில்‌ பறக்கும்‌ பிரிவில்‌ பைலட்‌ ஆகச்‌சேர விரும்பினால்‌ அதற்கு முதல்படி தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர்ந்து பயில்வதுதான்‌. மூன்று ஆண்டுகள்‌ பயில தேசிய பாதுகாப்பு அகாடெமியில்‌ சேர்த்து பயலாம். மூன்று ஆண்டுகள் பயில வேண்டும். 

            தேசிய பாதுகாப்பு அகாடமியில் விமானபடைப்‌ பிரிவில்‌ சேர வயது வரம்பு - 16.5% லிருந்து 19-வரை. கல்வித்‌ தகுதி - 10,  +2 என்ற வகையில் பன்னிரெண்டாம்‌ வகுப்பில்‌ தேர்ச்சி. +2 படிப்பில்‌ இயற்பியல், கணிதம் ஆகிய படங்கள் எடுத்து படித்திருக்க வேண்டும்‌. +2 படிப்பு மாநில மேல்நிலைக்  கல்வி வாரியம் அல்லது பல்கலைக்கழக ஆங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும்.

            தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர நுழைவு தேர்வு எழுத வேண்டும். மத்திய தேர்வாணைய பணிக்குழு இந்த தேர்வை நடத்தும். அடுத்து படைபிரிவு தேர்வு வாரியம் நேர்காணலில் நடத்தும் தேர்வில் வெற்றிபெற வேண்டும். எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுவார்கள்.


பறக்கும் பயற்சி:

            தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர்த்து மூன்று ஆண்டுகள் பயின்ற பிறகு பி.ஏ., அல்லது பி.ஏஸ்ஸி., பட்டம் கிடைக்கும்.
            இந்த பட்டம் பெற்ற பிறகு விமானத்தில் பறக்க - அதாவது விமானத்தை ஓட்ட 52 வாரங்கள் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சி பெற விமானபடை பயிற்சி அகாடமி அல்லது விமான பறப்புப் பயிற்சி பள்ளியில் சேர வேண்டும்.


நேரடியாக  சேர்த்தல்:

            கம்பைண்ட் டிபென்ஸ் சர்விசஸ் எக்ஸாமினேஷன் - இந்த தேர்வில் வெற்றி பெற்றால் 22 வாரம் பயிற்சி அளிக்கப்படும். இதற்க்கு free plaint training என்று பெயர். இதற்க்கு பிறகு 52 வார பரப்பு பயிற்சி  அளிக்கப்படும். இது தேசிய பாதுகாப்பு அகாடெமியில்‌ படிப்பதற்கு சமம். அவர்களைப்‌ போலவே. விமானப்படை பயிற்சி அகாடமி அல்லது விமானப்‌ பறப்புப்‌ பயிற்சி பள்ளியில்‌ சேர்த்து விடலாம்.


தேர்வுக்கான பாடங்கள்: 

            ஆங்கிலம், பொது அறிவு, அடிப்படை கணிதம் ஆகிய பாடங்களில்‌ தலா இரண்டு மணிநேரம்‌ தேர்வு. ஒவ்வொரு பாடத்திற்கும்‌ 100 மதிப்பெண்‌. அதிகபட்ச மதிப்பெண்‌ 300, குறைந்தபட்ச சேவைக்கான ஆபிசர்ஸ்‌ ட்ரெயினிங்‌ அகடெமியில்‌ சேர்பவர்களுக்கு கணிதத்‌ தேர்வு கிடையாது. அதிகபட்ச மதிப்பெண்‌ 200.


மூன்று வழிகள்‌

         விமானப்படையில்‌ சேர்வதற்கு மூன்று வழிகள்‌ உள்ளன.
        "பிளானிங்  பயிற்சிக்கு - கம்பைன்ட்‌ டிபென்ஸ்‌ சர்வீசஸ்‌ தேர்வு, தேசிய மாணவர்‌ படை மூலம்‌ ஒதுக்கீடு ஏர்மென்‌ தேர்வு. 
         இவற்றில் ஒன்றிற்கு மேற்பட்ட வழிகளில்‌ விமானப்படைக்கு விண்ணப்பிக்கலாம்‌. அப்போது விமானப்படையில்‌ பல்வேறு பிரிவுகளில்‌ தேர்வுகள்‌, நேர்காணல்கள்‌ நடக்கும்‌.


தேர்வுகள்: 

        பெரும்பாலும்  எல்லாத்‌ தேர்வுகளுக்கும்‌ “ஆம்‌', “இல்லை அல்லது பொருத்தமான விடைகளைத்‌ தேர்வு செய்யும்‌ முறையில்தான்‌ எழுத வேண்டிவரும்‌. தேர்வுத்தாள்கள்‌ ஆங்கிலத்தில்‌ மட்டுமே இருக்கும்‌.


உடற்தகுதிகள்:

         குறைந்தப்பட்ச உயரம்‌ 192 செ.மீ. எவ்வளவு உயரம்‌ இருந்தால்‌
உடல் எடை எவ்வளவு இருக்க வேண்டும்‌ என்று ஒரு கணக்கு இருக்கிறது. மேலும்‌ இது வயதைப்‌ பொறுத்தும்‌ வேறுபடும்‌.


வேறு சில உடற்தகுதிகள்:

            இதை தவிர விமானபடைக்கென்று வேறு சில உடற்தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பைலட் ஆக விரும்புகிறவர்களுக்கு இந்த தகுதிகள் அவசியம்.


காலின் நீளம்:

            குறைந்த பட்சம் 99 செ.மீ அதிகப்பட்சம் 120 செ.மீ மேல் இருக்க கூடாது.


தொடையின் நீளம்:

             அதிகப்பட்சம் 64 செ.மீ மேல் இருக்க கூடாது.


உட்காரும் நிலை:

             சாதாரணமாக உட்காரும்‌ நிலையில்‌ உயரம்‌ குறைறந்த பட்சம்‌
81.5 செ.மீ. அதிகபட்சம்‌ 76 செ.மீ. அதற்கு மேல்‌ இருக்கக்‌ கூடாது.
            காது, மூக்கு, தொண்டைக்‌ கோளாறு, தோல்‌, இரத்த நோய் அல்லது இரத்தக்‌ குழாய்களில்‌ கோளாறு ஏற்பட்டிருக்கக்‌ கூடாது. ரத்த அழுத்தம்‌ இயல்பாக இருக்க வேண்டும்‌. கணையம்‌, ஈரல்‌ போன்றவற்றில்‌ வீக்கம்‌ கூடாது.


தொழில்‌ நுட்பப்‌ பிரிவு : 

            விமானப்படையின்‌ பொறியியல்‌ பிரிவில்‌ சேர்வதற்கு வயது
வரம்பு 18-க்கு மேல்‌ 28-க்குள்‌.
            ஏரோ நாட்டிக்கல்‌ இஞ்சினியரிங்‌ (எலக்ட்ரானிக்ஸ்‌) (நிலையான
பணி அல்லது குறுகியகாலப்‌ பணி).


கல்வித்‌ தகுதிகள்‌ :

            பொறியியல்‌ பாடங்களில்‌ பட்டம்‌, தனித்தனிப்‌ பாடங்களிலோ
அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களிலோ படித்துப்‌ பட்டம்‌
பெற்றிருப்பவர்களும்‌ தகுதி உடையவர்கள்‌.(Electronics, Telecommunications, Electronical, Electronical communication, Computer science and Engineering)
            கொல்கத்தா பல்கலைக்கழகத்தில்‌ பி.டெக்‌. பட்டம்‌ (Radio Physics and Electronics)
            மும்பை பல்கலைக்கழகத்தில்‌ பி.எஸ்ஸி., இயற்பியல் பட்டம் (மின்னுனுவியலுடன்).
            டில்லி, பெங்களூரு, சென்னை, குஜராத்‌, லக்னோ, கொல்கத்தா
பல்கலைக்கழகங்களில்‌ பெற்ற எம்‌.எஸ்ஸி., (மின்னணுவியல் ) பட்டம்‌. பாடங்களுடன்‌ பின்வருவனவற்றிலும்‌ தேறி இருக்க வேண்டும்‌.
கல்வி தவிரவும்‌, அங்கீகரிக்கப்பட்ட சேவை, பழுதுப்பார்ப்பு, உற்பத்தி மையங்களும் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் செயல்முறை அனுபவம், பட்டபடிப்புடன் மேலும் தேவைப்படும் தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. 


தகுதிகள்: 

            AMIE or Equivalent qualification in Electronics / Electrical Communication / Radio
            Engineering / Avionics / Associate membership Examination of  Aeronautical society of India with Arionics communication.
            விமான வ்ந்திர பொறியலில் இரண்டு விதமான சேவைகள் செய்யலாம். ஓன்று நீண்டகால சேவை, மற்றொன்று குறிகிய காலா சேவை.
             இந்த பணிகளுக்கான விளம்பரங்கள் ஒவ்வொரு ஆண்டும்‌ ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில்‌ பிரபல நாளிதழ்கள்‌, Employment News போன்றவற்றில்‌ வரும்‌.
              இந்த பணிகளில் சேர தேவைப்படும் கல்வித்‌ தகுதியைத்‌ தவிர ஆங்கீகரிக்கப்பட்ட சேவை, பழுதுப்பார்ப்பு, உற்பத்தி மையங்களில் இரண்டு ஆண்டுகளாவது செயல்முறை அனுபவம் பெற்று இருக்க வேண்டும், கல்வி தகுதிகள் பின்வருமாறு:

                Aeronautical Engineering(Mechanical) (Permanent Commission Or Short service Commission)


Education Qualification:

            Engineering Degree in Aeronautical / Mechanical / Production / Industrial Production OR BSc., Physics, Maths and Chemistry and Must have passed one of following:
            AMIE or Equivalent qualification,
            Associate Membership Examination part II and III of aeronautical society of India with Group I OR Group II(Maintenance, Repair and Overhaul) Subjects.           


நுழைவுத்தேர்வு

            நுழைவுத் தேர்வில் உளவியல்‌ தேர்வு குழுத்தேர்வு மற்றும்‌ நேர்காணலில் ஆகியவற்றில்‌ வெற்றி பெற வேண்டும்‌. டேராடூன்‌, மைசூர், வாரனாசி ஆகிய இடங்களில்‌' உள்ள விமானப்படைத்‌தளங்களில் தேர்வு மையங்களில்‌ இவற்றை நடத்துவார்கள்‌.
            இந்தத்‌ தேர்வுக்கு முன்னதாக ஒரு தேர்வு பல்வேறு விமானப்படை மையங்களில்‌ நடக்கும்‌. இது பொறியியல்‌ தொடர்பான அறிவுத்‌ திறனை ஆராய்வதாக அமையும்‌, இதில்‌ தேர்வு பெறுபவர்கள்‌ மட்டுமே அடுத்த கட்ட தேர்வுகளுக்கு அழைக்கப்படுவார்கள்‌.


கல்லூரி மாணவர்கள்‌ கவனத்திற்கு:

                கல்லூரியில்‌ படிக்கும்‌ போதே விமானப்படையில்‌ இருந்து
சம்பளம்‌ வாங்க வாய்ப்பு உண்டு. இது உதவித்‌ தொகையாக வழங்கப்படும்‌. நீண்ட காலம்‌ விமானப்படையில்‌ சேவை செய்வதாக இருந்தால்‌, “பிளையிங்‌: ஆபிசர்‌ பதவிக்கான அடிப்படைச்‌ சம்பளம்‌ பெறலாம்‌. குறுகிய காலச் சேவையை தேர்ந்தெடுத்தால்‌ அதில்‌ பாதியளவு உதவித்தொகை பெறலாம்‌.