Tamil Nadu Police, Fireman Male / Female:
தகுதியுடைய அனைத்து விண்ணப்பதாரர்களும் எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்ற பின் அழைக்கப்படும், விண்ணன்பத்தார்கள் உடல்கூறு அளத்தல், அளத்தல், உடல்தாங்கும் திணறித் தேர்வு மற்றும் உடல்திறன் தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும்.
கல்வித்தகுதி:
பழைய பாடத்திட்டத்தின் படி எஸ்.எஸ்.எல்.சி. அல்லது புதிய பாடத்திட்டத்தின் படி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உடல்கூறு அளத்தல்:
கல்வி, வயது ஆகியவற்றில் தகுதியுடையவர்கள் மட்டும் இத்தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். உடல்கூறு அளத்தலில் தேர்வு பெற்றவர்கள் உடல் தாங்கும் திறனறித் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
உடல் அளவுகள் (ஆண் பிரிவு) :
உயரம் குறைந்த அளவு 167 செ.மீட்டர் இருக்க வேண்டும். அனைத்து வகுப்பினருக்கும் சாதாரண நிலையில் 81 செ.மீ இருக்க வேண்டும். மூச்சடக்கிய நிலையில் மார்பு விரிவாக்கம் குறைந்த அளவு 5 செ.மீ இருக்க வேண்டும். ஆதி. திராவிடர், பழங்குடியினர் உயரம் குறைந்த அளவு 165 செ.மீட்டர் இருக்க வேண்டும்.
உடல் அளவுகள் (பெண் பிரிவு) :
உயரம் குறைந்த அளவு 159 கெமீட்டர் இருக்க வேண்டும். ஆதி திராவிடர், பழங்குடியினர் உயரம் குறைந்த அளவு 157 செ.மீ இருக்க வேண்டும்.
உடல்தாங்கும் திறனறித் தேர்வு:
ஆண் விண்ணப்பதாரர்கள் 1500. மீட்டர் ஒட்டத்தினை 7 (ஏமு) நிமிடங்களில் முடிக்க வேண்டும். இதில் தேர்வு பெற்றவர்கள் மட்டுமே உடல் திறன் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். பெண் விண்ணப்பதாரர்கள் 400 மீட்டர் ஓட்டத்தினை 2: (இரண்டு) நிமிடங்களில் முடிக்க வேண்டும். இதில் தேர்வு பெற்றவர்கள் மட்டுமே உடல் திறன் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
உடல்திறன் தேர்வுகள்
உடல் தாங்கும் திறனறித் தேர்வில் தகுதியுடையவர்கள் மட்டும் உடல் திறன் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.
எழுத்துத் தேர்வு :
அ) பொது அறிவு
(குறியிலக்கு முறையில், தமிழில்) - 50 மதிப்பெண்கள்
ஆ) உளவியல்
(குறியிலக்கு முறையில், தமிழில்) - 30 மதிப்பெண்கள்
மொத்தம் - 80 மதிப்பெண்கள்
பொதுஅறிவுத் தேர்வு பள்ளி இறுதி வகுப்பு(எஸ்.எஸ்.எல்.சி) தரத்திற்கு இருக்கும். உளவியல் தேர்வு தேர்வாளரின் இயற்கையான ஆற்றலையும் மனோபாவத்தையும் சோதிப்பதாய் இருக்கும், ஒ௫ கேள்வித் தாளில் பகுதி “அ' பொது அறிவு வினாக்களையும், பகுதி 'ஆ உளவியல் வினாக்களையும் கொண்டதாக எழுத்துத் தேர்வு இருக்கு இத்தேர்வில் குறைந்தபட்சம் 28 மதிப்பெண்கள் பெற வேண்டும்.
அசல் சான்றிதழ்களைச் சரிபார்த்தல் :
எழுத்துத் தேர்வில் தேர்வு பெற்றவர்களுக்கு மட்டுமே ௮சல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். விண்ணப்பத்துடன் பொதுஅறிவுத் தேர்வு எஸ்.எஸ்.எல்.சி தரத்திற்கு இருக்கும். உளவியல் தேர்வு தேர்வாளரின் இயற்கையான ஆற்றலையும் மனோபாவத்தையும் சோதிப்பதாய் இருக்கும், ஒரே கேள்வித் தாளில் பகுதி 'அ' பொது அறிவு வினாக்களையும், பகுதி 'ஆ'. உளவியல் வினாக்களையும் கொண்டதாக இருக்கும். இத்தேர்வில் குறைந்தபட்சம் 28 மதிப்பெண்கள் பெற வேண்டும்.
மதிப்பெண்களின் ஒதுக்கீடு :
௮) எழுத்துத் தேர்வு - 80 மதிப்பெண்கள்
ஆ) உடல் திறன் தேர்வு - 15 மதிப்பெண்கள் 1
இ) சிறப்பு மதிப்பெண்கள் - 5 மதிப்பெண்கள்
மொத்தம் - 100 மதிப்பெண்கள்
0 Comments