How to become an Indian Administrative Service (IAS):
IAS, IPS போன்றவை மிகப்பெரிய படிப்பு என்றும், ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மாணவ-மாணவியர் தங்களால் இவ்வளவு பெரிய படிப்பைப் படிக்க முடியாது என்றும் எண்ணுகின்றனர். இக்கருத்து முற்றிலும் தவறானது. ஏனென்றால் IAS/IPS/IFS போன்றவை படிப்புகள் அல்லவே அல்ல. இவை Civil Services தேர்வுகள் ஆகும்.
தகுதி :
B.A., B.SC., B.COM., B.E என ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் யார் வேண்டுமனாலும் இத்தேர்வை எழுதலாம்.
வயது வரம்பு :
சாதாரணமாக 21 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் இத்தேர்வுகளை எழுதலாம். OBC பிரிவினருக்கு 33 வயது வரையிலும், SC/ST பிரிவினருக்கு 35 வயது வரையிலும் உயர்ந்த பட்ச வயது வரம்பு தளர்த்தப்படுகிறது.
முயற்சிகளின் எண்ணிக்கை :
பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் 4 முறையும், OBC பிரிவினர் 7 முறையும், SC/ST பிரிவினர் 35 வயதுக்குள் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தத் தேர்வை எழுதலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
இத்தேர்விற்கான அறிவிப்பு பொதுவாக டிசம்பர் மாதத்தில் EMPOLYMENT NEWS மற்றும். அனைத்து முன்னணி செய்தித்தாள்களிலும் வெளியிடப்படும். அறிவிப்பு வெளியிடப்பட்டபின், அனைத்துத் தலைமை அஞ்சலகங்களிலும் இத்தேர்விற்கான விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம். முழுமையாகப்பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் பதிவுத் தபாலில் Secretary, Union Public Service Commission, Dholpur House, New Delhi - 110011 என்ற முகவரிக்கு அனுப்பப்படவேண்டும்.
தேர்வு:
1. முதல்நிலை தேர்வு(Preliminary Exam)
இது இரண்டு தாள்களை கொண்டது.
Paper 1: பொது அறிவு (General Studies)
Paper 2: விருப்ப பாடம் (Optional Paper)
இவ்விரண்டிலும் கேள்விகள் ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டும் அமைந்து இருக்கும். Paper 1இல் பொது அறிவு என்னும் பிரிவின் கீழ் பொது அறிவியல், தற்கால நிகழ்வுகள், இந்திய வரலாற்று நிகழ்வுகள், இந்திய மற்றும் உலக புவியியல், இந்திய அரசியலமைப்பு மற்றும் பொருளாதாரம், பொது அறிவுக் கூர்மை ஆகிய பகுதிகளில் இருந்து 150 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் வீதம் 150 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
Paper 2இல் விருப்பப்பாடமாக கீழ்க்கண்ட பாடங்களில் ஏதேனும் ஒன்றை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். அதிலிருந்து 120 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் 2.5 மதிப்பெண்கள் வீதம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
விருப்பப் பாடமாகத் தேர்வு செய்யத்தக்க பாடங்கள் :
- Agriculture
- Animal Husbandry & Veterinary Science
- Botany
- Chemistry
- Civil Engineering
- Commerce
- Economics
- Electrical Engineering
- Geography
- Geology
- Indian History
- Law
- Mathematics
- Mechanical Engineering
- Medical Science
- Philosophy
- Physics
- Politic Science
- Psychology
- Public Administrative
- Society
- Statics
- Zoology
2. முதன்மை தேர்வு(Main Exam)
Paper 1 : மொழித் தேர்வு
Paper 2 : ஆங்கிலம்
Paper 3: கட்டுரை
Paper 4 மற்றும் Paper 5 பொது அறிவு.
Paper 6 முதல் Paper 11வரை ஏதேனும் இரண்டு விருப்பப்பாடங்களை தேர்தெடுக்க சொல்லி அவை ஒவ்வொன்றிலும் இருந்து இரண்டு Paperவீதம் மொத்தம் நான்கு Paperகளுக்கு தேர்வு நடத்தப்படும்.
Paper 1 இல் எழுத வேண்டிய மொழித் தேர்வில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி அங்கீகரிக்கப்பட்டுள்ள அஸ்ஸாமி, பெங்காளி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மணிப்புரி, மராத்தி, நேப்பாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, உருது, சிந்து ஆகிய 18 மொழிகளில் ஏதேனும் "தன்னைத் தேர்வு செய்து அதில் இத்தேர்வை எழுதலாம். இத்தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.
Paper 2 ஆங்கிலத் தேர்வு ஆகும். இதிலும் 300 மதிப்பெண்கஞக்கு கேள்விகள் கேட்கப்படும். உயர்பணிகளுக்கு ஆங்கிலம் மிக அவசியமானதால் ஆங்கிலத்திற்கு ஒரு Paper கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதிலும் 300 மதிப்பெண்களுக்குக் கேள்விகள் கேட்கப்படும். இதில் 400 Words essay writing, Paragraph Comprehension, Precis Writing, Grammar & Vocabulary பகுதிகளிலிருந்து பெரும்பாலும் SSLC தரத்தில் கேள்விகள் அமைந்திருக்கும்.
Paper 3 இல் கொடுக்கப்பட்டுள்ள ஆறு கட்டுரைகளில் ஒன்றை மட்டும் தேர்வு செய்து சுமார் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதவேண்டும். தேவையான துணைத் தலைப்புக்கள் மற்றும் கட்டுரைக்கான தனிப்பட்ட அம்சங்களுடன் விடை அமைதல் வேண்டும். இதற்கு 200 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
Paper 4 மற்றும் Paper 5 இல் பொது அறிவு (General Studies)சம்பந்தப்பட்ட பாடப் பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். Paper 4 இல் history of Modern India and Indian Culture(நவீன இந்திய வரலாறும். இந்தியக் கலாச்சாரமும்), Indian Geography (இந்தியப் பவியியல்), Indian Policy (இந்திய அரசியலமைப்பு), Current National Issues and Topics of Social Relevance (தற்காலத்தேசிய நிகழ்வகள் மற்றும் சமூக நலத் தலையங்கங்கள்) ஆகியவற்றிலிருந்து 300 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.
Paper 6 மற்றும் Paper 7 (இந்தியாவும் உலகமும்), இவை இரண்டும் ஏதேனும் ஒரு விருப்பப்படத்திலிருந்து, Paper 8 மற்றும் Paper 9 மற்றொரு விருப்பப்படத்திலிருந்தும் கேட்கப்படும். இவ்வாறு இந்த நன்கு Paperக்கு நமே இரண்டு பாடங்களை தேர்தெடுக்க வேண்டும்.
Paper 5 இல் Indian and the world(இந்தியாவும் உலகமும் ), Indian Economics (இந்தியப் பொருளாதாரம்), International Affairs and Instuitions (உலக அளவிலான தகவல்கள் மற்றும் அமைப்புகள்), Developments in the Field of Science & Technology, Communication and space(அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், தகவல் தொடர்பு, விண்வெளி அறிவியல் முன்னேற்றங்கள்), Statics Analysis, Graph and Diagrams (புள்ளியியல் பகுப்பாய்வு, வரைபடங்கள் மற்றும் விளக்கப்படங்கள்) ஆகியவற்றில் இருந்து 300 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.
விருப்பப் பாடமாகத் தேர்வு செய்யத்தக்க பாடங்கள் :
- Agriculture
- Animal Husbandry & Veterinary Science
- Botany
- Chemistry
- Civil Engineering
- Commerce
- Economics
- Electrical Engineering
- Geography
- Geology
- Indian History
- Law
- Mathematics
- Mechanical Engineering
- Medical Science
- Philosophy
- Physics
- Politic Science
- Psychology
- Public Administrative
- Society
- Statics
- Zoology
- Management
- Mathematics
- Political and Science & International Relations - Public Administration
- Commerce & Accountancy - Management
- Anthropology - Sociology
- Mathematics - Statics
- Agriculture - Animal Husbandry & Veterinary Science
- Management - Public Administration
- Any two Engineering Subjects
- Animal Husbandry & Veterinary Science - Medical Science
0 Comments